பவானியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை..!

ஈரோடு மாவட்டம் பவானி பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

Update: 2024-07-04 04:45 GMT

►பவானி பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்திய போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் பவானி நகரம் மற்றும் லட்சுமி நகர், காலிங்கராயன்பாளையம் பகுதியில் உள்ள பானிபூரி கடைகள் மற்றும் அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று (3ம் தேதி) திடீர் சோதனை நடத்தினர். இதில், உணவுப் பொருட்களில் கலப்படம், தரமின்மை, ரசாயனப்பொருட்கள் கலப்பு குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின்போது, காளான் மசாலா தயாரிக்க கலர் பவுடர் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது. மேலும், பானி பூரி மசாலா தயாரிக்க பயன்படுத்தப்படும் பட்டாணி மற்றும் இதர மூலப்பொருட்கள் மிகவும் தரம் குறைந்தவையாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விதிமீறிய கடைகளுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து, அசைவ ஓட்டல்களில் சோதனை செய்யப்பட்டதில் சில்லி சிக்கனில் கலர் பவுடர் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொரு, ஓட்டலில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப் பட்டிருந்த 10 கிலோ அரிசி சாதம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பவானி உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சதீஷ்குமார், லட்சுமி ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News