ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உணவு தயாரித்தல் போட்டி

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உணவு விடுதி மேலாண்மை துறை மற்றும் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு உணவு தயாரிக்கும் போட்டி நடைபெற்றது.

Update: 2024-10-10 14:45 GMT

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உணவு தயாரித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கல்லூரியின் தாளாளர் தங்கவேல், முதல்வர் வாசுதேவன் ஆகியோர் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உணவு விடுதி மேலாண்மை துறை மற்றும் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு உணவு தயாரிக்கும் போட்டி நடைபெற்றது. 

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உணவு விடுதி மேலாண்மை துறை மற்றும் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி இணைந்து மாணவ, மாணவியர்களுக்கு "பட்டிங் செ ஃப் குக் வித் கோ ப்ரோ " என்ற தலைப்பில் உணவு தயாரிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது.


இந்தப் போட்டியில் பல்வேறு துறையில் இருந்து 50க்கும் மேற்பட்ட குழுக்கள் கொண்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். போட்டிக்கு, கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் எச்.வாசுதேவன் முன்னிலை வகித்தார். போட்டியினை, உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறையின் தலைவர் எஸ்.கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்தனர்.

போட்டியின் முடிவில் முதல் பரிசினை இறுதியாண்டு வணிகவியல் துறையை சார்ந்த கே.பவிக்ஷனா, டி.கவிதா, கே.தேவதர்ஷினியும், இரண்டாம் இடத்தை உயிர் வேதியல் துறையை சார்ந்த எம்.மகாதர்ஷினி, ஆர்.பி. சுபா ராணி, வி.பூவரசனும், மூன்றாம் இடத்தை கணினி துறையை சார்ந்த பி.கே.நந்தினி, எஸ்.துர்கா, எம்.காஞ்சனாவும், நான்காம் இடத்தை வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டு துறையை சார்ந்த எம்.பி.தாருன்யா, எஸ். லக்ஷனா, ஈ.கங்கா ஆகியோர் பெற்றனர்.


மேலும், போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் எச்.வாசுதேவன் ஆகியோர் வெற்றி பெற்றதற்கான பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News