ஈரோட்டில் சிறுமியை கர்ப்பமாக்கிய பூக்கடை உரிமையாளர் கைது
ஈரோட்டில் சிறுமியை கர்ப்பமாக்கிய பூக்கடை உரிமையாளரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
Erode Today News, Erode News, Erode Live Updates - ஈரோட்டில் சிறுமியை கர்ப்பமாக்கிய பூக்கடை உரிமையாளரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரை அவரது பெற்றோர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சிறுமி கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியின் கர்ப்பத்திற்கு ஈரோடு மரப்பாலம் வள்ளுவர் விதியை சேர்ந்த பூக்கடை உரிமையாளரான அப்துல் ரகுமான் (வயது 32) தான் காரணம் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அப்துல் ரகுமானை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். மேலும், கைதான அப்துல் ரகுமான் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.