சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பாதியாக குறைந்த பூக்களின் விலை

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் திங்கட்கிழமை (இன்று) பூக்களின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Update: 2023-10-23 11:30 GMT

பைல் படம்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (அக்.23) திங்கட்கிழமை ஆயுத பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாகவே பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களின் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம்.

ஆனால், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்றை விட இன்று பூக்களின் விலை பாதியாக குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே கரட்டூர் ரோட்டில் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு கிலோ ரூ.1,180க்கு விற்கப்பபட்ட மல்லிகைப்பூ இன்று (திங்கட்கிழமை) ரூ.740க்கும், ரூ.720க்கு விற்பனையான முல்லைப்பூ ரூ.425க்கும், ரூ.500க்கு விற்பனையான காக்கடா ரூ.300க்கும், ரூ.130க்கும், ரூ.130க்கு விற்பனையான செண்டுமல்லி ரூ.99க்கும் விற்பனையானது.

இதேபோல், ரூ.110க்கு விற்பனையான பட்டுப்பூ ரூ.47க்கும், ரூ.1,000க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.400க்கும், ரூ.350க்கு விற்பனையான அரளி ரூ.300க்கும், ரூ.50க்கு விற்பனையான துளசி ரூ.40க்கும், ரூ.250க்கு விற்பனையான செவ்வந்தி ரூ.200க்கும் விற்பனையானது. பூக்கள் விலை சரிவால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News