அந்தியூர் குருநாதசுவாமி கோயிலில் முதல் வன பூஜை
Erode News- ஈரோடு மாவட்டம் அந்தியூரில் புகழ்பெற்ற குருநாதசுவாமி கோயிலில் முதல் வன பூஜை இன்று (31ம் தேதி) நடந்தது.
Erode News, Erode News Today- அந்தியூரில் புகழ்பெற்ற குருநாதசுவாமி கோயிலில் முதல் வன பூஜை இன்று (31ம் தேதி) நடந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 24ம் தேதி கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
இதனைத் தொடர்ந்து, இன்று (31ம் தேதி) முதல் வன பூஜை நடந்தது. இதற்காக, புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து குருநாதசுவாமி, காமாட்சியம்மன், பொருமாள்சுவாமி உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட மூன்று தேரில் தனித்தனியாக வைத்து பூஜை செய்யப்பட்டது.
பின், மேள தாளங்கள் முழங்க, மூன்று தேர்களையும் பக்தர்கள் தோளில் சுமந்து, 3 கி.மீ தூரத்தில் உள்ள வனக்கோயிலுக்கு தூக்கிச் சென்றனர். தேர் வனக்கோயிலுக்கு சென்றதும், அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஏராளமானோர் ஆடு, கோழி பலி கொடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
இவ்விழாவில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, நாளை (1ம் தேதி) அதிகாலை 3 தேர்களும் மீண்டும் மடப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படும். வரும் ஆகஸ்ட் 7ம் தேதி தேர்த்திருவிழா துவங்கி, 10ம் தேதி வரை நடைபெறுகிறது. 14ம் தேதி பால் பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
இவ்விழா, ஏற்பாடுகளை செயல் அலுவலர் மோகனபிரியா, பரம்பரை அறங்காவலர்கள் சாந்தப்பன், குருராஜேஷ் ஆகியோர் செய் செய்து வருகின்றனர்.