ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்

Erode news- ஈரோடு மாவட்ட அளவிலான தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

Update: 2024-05-10 12:00 GMT

Erode news- ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட அளவிலான தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் மாவட்ட அளவிலான தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வெப்ப அலை தாக்கத்தினால் மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்க தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழுவினர் மூலம் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தினார். மேலும், பட்டாசு உட்பட இதர தொழிற்சாலைகள், பட்டாசுகளை இருப்பு வைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் கோடை காலங்களில் கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்துவதோடு, போதிய தீயணைப்பு சாதனங்களை வைத்திருப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். கோடை காலங்களில் காடுகளில் காட்டுத்தீ ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் அவர் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், ஈரோடு மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) அம்பிகா, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் வினோத்குமார், துணை இயக்குநர் கார்த்திகேயன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா உட்பட பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளின் பிரதிநிதி மற்றும் கோபிசெட்டிபாளையம் பட்டாசு விற்பானையாளர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News