நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்த விவசாயிகள் வலியுறுத்தல்

நெல்லுக்கான ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-11-19 09:30 GMT

கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச்சங்கத்தின் தலைவர் நல்லசாமி.

நெல்லுக்கான ஆதார விலையை ஒன்றிய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச்சங்கத்தின் தலைவர் நல்லசாமி கூறியதாவது:- 

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.150 உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதை வரவேற்கிறோம். ஆனால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஒன்றிய அரசு அறிவிக்காமல் உள்ளது. கோதுமை வடமாநிலங்களில் தான் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதனால் மத்திய அரசின் அறிவிப்பானது வடமாநில விவசாயிகள் பயன்பெறும் வகையில் உள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் நெல் உற்பத்தியானது அதிக அளவில் உள்ளது. எனவே தென் மாநில விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல்லுக்கான ஆதார விலையை அறிவிப்பதோடு, கோதுமைக்கு அறிவித்துள்ள போல இதுவரை இல்லா அளவுக்கு உயர்த்தி வழங்க மத்திய அரசு முன் வர வேண்டும்.

இதேபோல, 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டமானது விவசாய பணிகளுக்காக பயன்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மாற்றிமைக்க முன்வர வேண்டும். ஏனெனில், கூலி ஆட்கள் தட்டுப்பாடு என்பது விவசாயத்தில் அதிக அளவில் உள்ளது. இதை கருத்தில் கொண்டு மாற்றம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News