அந்தியூர்: 70% மானியத்தில் சோலார் பம்பு சேட் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
அந்தியூர் தொகுதியில் மானியத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்ப் செட் அமைக்க விவசாயிகள் வரலாம் என எம்எல்ஏ தகவல்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மின் இணைப்பில்லாத பாசன வசதிகள் உள்ள விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் அமைக்கும் திட்டம் ரூ 2 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு 10 ஹெச்பி வரையிலான மின் கட்டமைப்புடன் சாராத தனித்து இருத்தல் வேண்டும். மேலும் நிலத்தடி நீர்மட்டம் 400 அடிக்குள் உள்ள வட்டார விவசாயிகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் பர்கூர், கூகலூர், வாணிபுத்தூர் உள் வட்டார விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இதில் விவசாயிகளின் பங்களிப்புத் தொகை ரூ 1லட்சத்து 3 ஆயிரம் ஆகும். தேவைப்பட்டால் வங்கிக் கடன் உதவி செய்து தரப்படும்.இதரப் பகுதிகளில் ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் இன்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில் அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகளை அமைத்துக் கொள்ளலாம். தகுதி உள்ள விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள அந்தியூர் கோபி tn பாளையம் வட்டார வேளாண்மை அலுவலக வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளரை அணுகலாம் என அதில் தெரிவித்துள்ளார்.