ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-27 11:00 GMT

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக,  இன்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியலாம் இருப்பவர்களிடம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை நேற்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் தலைமையிலான போலீசார் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானாவில் சோதனை நடத்தினர். அப்போது, முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முகக்கவசம் வழங்கி, காவல்துறையினர் அறிவுரை கூறினார்.

மேலும், இன்று முதல் நாள் என்பதால்,  முகக்கவசம் வழங்கி அறிவுரை கூறுகிறோம். நாளையும் மக்கள் இது போன்று முகக்கவசம் அணியாமல் வந்தால், கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News