ஈரோடு மாநகராட்சியில் வரிவிதிப்பு அதிகம் : கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு..!

ஈரோடு மாநகராட்சியில் வரிவிதிப்பு அதிகமாக விதிக்கப்படுவதாக கவுன்சிலர்கள் மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் குற்றம் சாட்டினர்.

Update: 2024-08-30 13:00 GMT

ஈரோடு மாநகராட்சி கூட்டரங்கில் நடந்த சாதாரண கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

Erode Corporation Ordinary Meeting

Erode Today News, Erode Live Updates, Erode Corporation - ஈரோடு மாநகராட்சியில் வரிவிதிப்பு அதிகமாக விதிக்கப்படுவதாக கவுன்சிலர்கள் மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் குற்றம் சாட்டினர்.

ஈரோடு மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் இன்று (30ம் தேதி) நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மனிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் கலந்து கொண்டார்.

கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி மேயர் நாகரத்தினம் திருக்குறள் வாசித்து அதற்கான விளக்கம் தந்தார். கூட்டத்தில் 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்கள் வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேச தொடங்கினர். அப்போது, மாநகராட்சியில் வரிவிதிப்பு அதிகமாக விதிக்கப்படுவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News