கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Update: 2024-04-26 11:30 GMT

கோபி பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர், மோர் வழங்கினார்.

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினம்தோறும் 108 டிகிரிக்கு மேல் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும் அரசும் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அதிமுக சார்பில் தமிழக முழுவதும் நீர்மோர் பந்தல் திறக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் கோபி பேருந்து நிலையத்தில் திறக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி ஆகியவைகளை அவர் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் தற்போது நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மோர் பந்தல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். வரும் ஜூன் மாத இறுதி வரை இந்த நீர் மோர் பந்தல் திறந்திருக்கும். இந்த நீர் மோர் பந்தலை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட பொருளாளர் கே.கே. கந்தவேல்முருகன், மகளிர் அணி சத்யபாமா, கோபி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் மவுலீஸ்வரன், மருத்துவ அணி செயலாளர் ஆண்டமுத்து, கோபி ஒன்றியச் செயலாளர்கள் குறிஞ்சிநாதன், வக்கீல் வேலுமணி, கோபி நகர செயலாளரும் கவுன்சிலருமான பிரியோனி கணேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் கவுன்சிலருமான முத்துரமணன், பேரவை செயலாளர் விஜயகுமார், கோபி நகர மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் அனுநாகராஜ், வர்த்தக அணி செயலாளர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News