ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்

ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-08-02 12:15 GMT
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண். 

  • whatsapp icon

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமையொட்டி ஏராளமான மக்கள் வந்து இருந்து தங்களது குறைகள் குறித்து மனுவில் புகார் பெட்டியில் போட்டுச் சென்றனர். இந்நிலையில் ஈரோடு கமலா நகரைச் சேர்ந்த லலிதா (வயது 51) என்ற பெண் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் வந்து நின்று திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்தப் பெண்ணிடமிருந்து மண்ணெண்ணை பாட்டிலை பறித்து அந்தப் பெண்ணிடம் விசாரித்தார். விசாரணையில் லலிதா கூறியதாவது:

என் கணவர் பெயர் ராஜா. நாங்கள் கருங்கல்பாளையம் கமலா நகரில் வசித்து வருகிறோம். என் கணவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஒருவரும் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்நிலையில் உடல்நிலை காரணமாக எனது கணவர் கடந்த 8 மாதங்கள் முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் பணம் கொடுத்தவர்கள் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யத் தொடங்கினார். இதுகுறித்து அந்த பெண்ணிடம் கூறினால் அவர் தனக்கு ஒன்றும் தெரியாது நீயே பார்த்துக்கொள் என்று விரட்டி விட்டார். பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசாரிடம் புகார் தெரிவித்தேன். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நான் வாழ்வதைவிட சாகலாம் என்று முடிவு செய்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சூரம்பட்டி போலீசார் அந்த பெண்ணிடம் சமாதானம் பேசிய விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News