இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஈரோட்டில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டார்.

Update: 2021-03-18 04:16 GMT

ஈரோடு மாவடடத்தில் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பிரபல ரவுடிகளான கலைச்செல்வன் , கணசேகரன் ஆகிய இருவரை கடந்த மாதம் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் வேட்டை ரவி , பத்மநாபன் , மதன் , குட்டச்சாக்கு , அழகிரி ஆகியோர் 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை மாவட்ட ஆட்சியரிடம் பரந்துரை செய்தார்.

அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் அவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்தாண்டு இதுவரை 11 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News