கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
கீழ்பவானி வாய்க்காலில் பராமரிப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என ஈரோடு கலெக்டரிடம் கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் மனு அளித்தனர்.;
கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து கரூர் மாவட்டம் மங்களப்பட்டி வரை 124 மைல் தூரம் வரை 740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கீழ்பவானி கால்வாயில் கான்கீரிட் தளம் அமைக்க அரசு திட்டமிட்டு, இதற்கான பணிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில் கீழ் பவானி பாசன வாய்க்காலின் பராமரிப்பு பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கதிரவனை நேரில் சந்தித்து விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் காசியண்ணன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கீழ் பவானி பாசன வாய்க்கால் பராமரிப்பு பணிகளை உடனடியாக தொடங்கப்பட்டு விரைவாக முடிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.