ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி அம்மா உணவக ஊழியர்கள் மனு
ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி அம்மா உணவக ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தனர்.;
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த அம்மா உணவக ஊழியர்கள்.
ஈரோடு மாவட்டத்தில் 15 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஈரோடு மாநகராட்சி சார்பில் மாநகர் பகுதிக்குட்பட்ட 11 இடங்களிலும் , கோபி, சத்தி, புளியம்பட்டி, பவானி ஆகிய நகராட்சி சார்பில் 4 இடங்களிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் 158 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் இயங்கும் அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர்.
அந்த மனுவில், ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் 15 அம்மா உணவகத்தில் 158 பேர் பணியாற்றி வருகிறோம். இதில் கோபி, சத்தி, புளியம்பட்டி, பவானி ஆகிய நகராட்சி சார்பில் செயல்படும் 4 அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 350 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் மாநகராட்சி சார்பில் இயங்கும் அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 250 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் பணியாற்றிய எங்களுக்கு நகராட்சி சார்பில் வழங்கப்படும் 350 ரூபாய் ஊதியத்ததை போல மாநகராட்சி நிர்வாகமும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.