ஈராேட்டில் ஒரே தெருவில் 11 பேருக்கு தொற்று : தீவிர கண்காணிப்பு
ஈரோட்டில் ஒரே தெருவில் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தாெற்று ஏற்பட்டதால் அப்பகுதியை தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக மாநராட்சி அறிவிப்பு.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்தபோது பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ஒரே தெருவில் மூன்று வீடுகளுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அந்த தெரு தனிமைப்படுத்தப்பட்டு தடுப்புகள் அமைத்து உள்ளே இருந்து யாரும் வெளியேயும், வெளியே இருந்து யாரும் உள்ளேயும் செல்ல முடியாத அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பிறகு தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதும் மீண்டும் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதிக்குட்பட்ட கொல்லம்பாளையம் ஹவுசிங் போர்டு டி பிரிவில் உள்ள ஒரு வீதியில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் அந்த ஒரு வீதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த வீதி நுழைவாயிலில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் அந்த விதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வீதிக்குள் வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அந்த வீதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதி முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கையாக பிளசிங் பவுடர், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை இன்று ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தனர்.