மருத்துவமனை பாதுகாப்புச்சட்டம் இயற்றக்கோரி ஈரோட்டில் ஐஎம்ஏ ஆர்ப்பாட்டம்

தேசிய அளவில் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி, இந்திய மருத்துவச்சங்கத்தினர், கருப்பு பட்டை அணிந்து ஈரோட்டில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-18 12:04 GMT

ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில், அதிகளவு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர்.  ஆபத்தான சூழலில் பொதுமக்களை தொற்றில் இருந்து காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், வடமாநிலங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தாக்குதல் நடக்கிறது.

இதை கண்டிக்கும் வகையில் இன்று இந்திய அளவில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக, ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தின்போது, மருத்துவர்களை பாதுகாக்கும் மருந்துவமனை பாதுகாப்பு சட்டத்தை தேசிய அளவில் நடைமுறைபடுத்த வேண்டும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் சுகுமார் ,பொருளாளர் டாக்டர் சுதாகர் ,செயலாளர் செந்தில்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News