ஈரோட்டில் இன்று 76 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோட்டில் இன்று 76 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.;

Update: 2021-06-23 09:01 GMT

ஈரோட்டில், முகாம் ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் இளைஞர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது மாவட்டம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் குறைந்த அளவே வருவதால் கையிருப்பு பொறுத்து,   தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 76 மையங்களில் கோவிஷில்டு தடுப்பூசிகள் போடப்பட்டன. அதைத் தொடர்ந்து இன்று  ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள், புறநகர் பகுதியில் உள்ள 66 மையங்களில் கொரோனா தடுப்பு ஊசியான கோவேக்சின் செலுத்தப்பட்டது.

வழக்கம்போல் அதிகாலை முதலே தடுப்பூசி போடப்படும் மையங்களில் மக்கள் குவியத் தொடங்கினர். . முதலில் வந்த 200 பேருக்கு மட்டுமே டோக்கன் அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டன. தடுப்பூசி மையங்களின் முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 10 மையங்களில் இன்று தாமதமாகவே தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. புறநகர் பகுதிகளான 66 மையங்களில், வழக்கம்போல் தடுப்பூசி போட மக்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஊசி செலுத்திக் கொண்டனர்.

Tags:    

Similar News