ஈரோடு மாவட்டத்திற்கு கூடுதலாக 3 டன் ஆக்சிஜன் பெற நடவடிக்கை கலெக்டர் தகவல்

ஈரோடு மாவட்டத்திற்கு கூடுதலாக 3 டன் ஆக்சிஜன் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-06 05:00 GMT

ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் தேவையானவர்களுக்கு கிடைக்கச்செய்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது,

ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான ஆக்சிஜன் இருப்பில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த வகையிலும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கில் இருக்க வேண்டும்.

இதற்கான அழுத்தத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டும். திரவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்குகள் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். வாயு ஆக்சிஜனை விட, திரவ ஆக்சிஜன் நல்லது. இதுபோல் தற்போது எங்கெல்லாம் ஆக்சிஜன் இருப்பில் உள்ளது என்பதையும் கணக்கெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தீயணைப்பு படையினர் தனியார் மருத்துவமனை பட்டியல் பெற்று ஆக்சிஜன் சேமிப்பு பகுதிகளில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலா 3 டன் திரவ ஆக்சிஜன் கேட்டுப்பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.

Tags:    

Similar News