பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

ஈரோடு மாணவன் சக்திதருண் ஆன்லைன் வகுப்பு தனக்கு புரியவில்லை என்று கூறி மன உலைச்சலில் இருந்து வந்துள்ளார்.

Update: 2021-01-19 17:30 GMT

ஈரோடு, குமலன்குட்டை, கணபதி நகரைச் சேர்ந்தவர் தம்பி (வயது 57). இவரது மகன் சக்திதருண் (17). தம்பி நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.சக்திதருண் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார். சக்திதருண் கொரோனா தாக்கம் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் சக்திதருணின் பெற்றோர்கள் வெளியே சென்ற நிலையில் சக்திதருண் மட்டும் வீட்டில் இருந்து ஆன்லைனில் வகுப்பில் பங்கேற்றார்.

பின்னர் மாலை சக்திதருண் பெற்றோர்கள் வீட்டுக்கு வந்து வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் பதில் ஏதும் வராததால் மாடிக்கு சென்று பார்த்த போது அங்குள்ள ஒரு அறையில் சக்திதருண் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து மகனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சக்திதருண் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முதற்கட்டமாக சக்திதருண் ஆன்லைன் வகுப்பு தனக்கு புரியவில்லை என்று கூறி மன உலைச்சலில் இருந்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் ? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பிளஸ்- 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த நிலையில் சக்தி தருண் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News