ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பு

ஈரோடு அடுத்த சித்தோடு கொங்கம்பாளையம் எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

Update: 2024-04-26 03:30 GMT

ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் எஸ்.தீக்சித் சிலம்பம் சுற்றி, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

ஈரோடு அடுத்த சித்தோடு கொங்கம்பாளையம் எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

ஈரோடு அடுத்த சித்தோடு கொங்கம்பாளையம் எஸ்.வி.என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர் எஸ்.தீக்சித். இவர் 'உசு' மற்றும் சிலம்பம் மரபு வழி விளையாட்டு போட்டியை 2 மணி நேரம் நிற்காமல் நிகழ்த்தி காட்டி உலக சாதனை படைத்தார்.

இதைத்தொடர்ந்து இந்த சாதனை நிகழ்ச்சி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சியை நோபல் தலைமை இயக்குனர் வினோத் மற்றும் வாடிக்கையாளர் நிர்வாகி ஜனனி ஸ்ரீ ஆகியோர் கண்காணித்தனர். மாணவருக்கு பள்ளியின் கராத்தே மற்றும் சிலம்பம் தலைமை பயிற்சியாளர் ஆர்.கந்தவேல் பயிற்சி அளித்தார்.

சாதனை படைத்த மாணவர் எஸ்.தீக்சித்தை பாராட்டி பள்ளியின் தலைவர் ஆண்டவர் பி.சின்னச்சாமி, தாளாளர் பி.பெரியசாமி. முதல்வர் ஜே.தர்மராஜ் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவனை பாராட்டினர்.

Tags:    

Similar News