ஈரோட்டில் இன்று 107.96 டிகிரி பாரன்ஹீட் வெயில்

ஈரோட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 107.96 டிகிரி பாரன்ஹீட் வெயில் காரணமாக மதிய நேரத்தில் அனல் காற்று வீசியது.

Update: 2024-04-21 14:45 GMT

கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதி.

ஈரோட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 107.96 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனால் மதிய நேரத்தில் அனல் காற்று வீசியது.

கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே, ஈரோட்டில் கடந்த சில நாட்களாக 105 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. ஈரோட்டில் நேற்று முன்தினம் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக 109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்று 107.96 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. 

நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பகல் பொழுதுகளில் கடைவீதிகளில் மக்கள் கூட்டமும் குறைவாகவே காணப்படுகிறது. உஷ்ணத்தால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், உடலில் இருந்து அதிகளவில் வியர்வை வெளியேறி, சீக்கிரத்திலேயே களைப்பும் ஏற்படுகிறது. இதனால் நீண்டதூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே இருந்து விடுகின்றனர்.

மேலும், பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர்.

Tags:    

Similar News