ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில் கடைகள் ரூ.28 லட்சத்துக்கு ஏலம்
Erode news- ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில் தற்காலிக கடைகள் ரூ.28 லட்சத்துக்கு ஏலம் போனது.;
Erode news- பெரிய மாரியம்மன் (கோப்புப் படம்).
Erode news, Erode news today- ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில் தற்காலிக கடைகள் ரூ.28 லட்சத்துக்கு ஏலம் போனது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குண்டம் தேர்வு விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் தேர் திருவிழா வருகிற 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு மீனாட்சி சுந்தரனார் சாலையில் தற்காலிக கடைகள் அமைப்பதற்கான ஏலம் நடைபெற்றது.
இதில் 37 கடைகள் ரூ. 28 லட்சத்து 2 ஆயிரத்திற்கு ஏலம் போனது. இதர இனங்களுக்கான ஏலம் ரூ.3 லட்சத்திற்கு போனது. கடந்த ஆண்டை விட குறைவாக ஏலம் போயுள்ளது. இதைத் தொடர்ந்து இன்னும் சில நாட்களில் கடைகள் அமைப்பதற்கான பந்தல்கள் அமைக்கும் பணி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 19ம் தேதி பூச்சாட்டுதலும், 23ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஏப்ரல் 2ம் தேதி வாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம், பூ இறங்கும் விழா, மாவிளக்கு, கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 3ம் தேதி பொங்கல் விழா, சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து திருத்தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தலுடன் ஸ்ரீ மாரியம்மன் மலர் பல்லாக்கில் திருவீதி உலா நடைபெறுகிறது.
5ம் தேதி திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்த்தல், காரைவாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லாக்கில் திருவீதி , சின்ன மாரியம்மன் மலர் பல்லாக்கில் திருவீதி உலா நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 6ம் தேதி கம்பம் எடுத்தல் மற்றும் மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது. ஏப்ரல் 7ம் தேதி மறு பூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.