ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 342 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், திங்கட்கிழமை (இன்று) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 342 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

Update: 2024-01-08 10:45 GMT

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா குறைகளை கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், திங்கட்கிழமை (இன்று) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 342 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 342 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள்,  அமைச்சர் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளருக்கான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுவசதி திட்டத்திற்கான ஆணையினை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் குமரேஷ், தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News