ஈரோடு வடக்கு மாவட்ட ச.ம.க. சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அந்தியூர் அருகே அத்தாணி குப்பாண்டபாளையத்தில் வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.;

Update: 2022-07-15 03:15 GMT
ஈரோடு வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாள் விழாவையொட்டி ஈரோடு வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக வடக்கு மாவட்ட செயலாளர் எம்.குருநாதன் தலைமையில் அத்தாணி குப்பாண்டபாளையத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில், காமராஜர் பிறந்தநாளையொட்டி, சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் உடல் உறுப்பு தான ஒப்பந்தம் செய்தனர்.இந் நிகழ்வில் அவைத்தலைவர் செல்வகுமார்,மாவட்ட பொருளாளர் குமார், அந்தியூர் ஒன்றிய துணைச் செயலாளர் தங்கராசு, மாவட்ட மாணவரணி செயலாளர் பிரசாந்த், மாவட்ட அலுவலக நிர்வாகி குமாரசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News