ஈரோடு: பர்கூர் காவல் நிலைய தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை

Erode news, Erode news today-ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல் நிலைய தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-02-19 11:30 GMT

Erode news, Erode news today- பர்கூர் காவல் நிலைய தலைமை காவலர் ராஜா.

ஈரோடு: பர்கூர் காவல் நிலைய தலைமை காவலர்  தூக்கிட்டு தற்கொலை
  • whatsapp icon

Erode news, Erode news today-- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல் நிலைய தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, வையப்பமலை, பாலமேட்டைச் சேர்ந்தவர் ராஜு மகன் ராஜா (வயது 45). இவர், பர்கூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி ரேவதி (31) மற்றும் இரு மகள்கள் உள்ளனர். அந்தியூர் பிரிவில் உள்ள பவானி காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், கடந்த வாரம் மனைவி ரேவதி, கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால், தனிமையில் வீட்டில் இருந்து வந்த ராஜா, கடுமையான மன உளைச்சலில் காணப்பட்டார். இந்த நிலையில், நேற்று திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பவானி போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவலர் குடியிருப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News