ஈரோடு மூலப்பட்டறை அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

ஈரோடு மூலப்பட்டறை அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், மூலப்பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2024-05-10 05:41 GMT
ஈரோடு மூலப்பட்டறை அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு பழங்கள் வழங்கப்பட்டது.

ஈரோடு மூலப்பட்டறை அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், மூலப்பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

ஈரோடு மூலப்பட்டறை அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு கோடை வெயிலை தணிக்கும் வகையில் நீர்மோர் பந்தல் மூலப்பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கௌரவத் தலைவர் தங்கராஜ், சங்க செயலாளர் ரியாஷ் அகமது, சங்க பொருளாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் இரா.க.சண்முகவேல், மாவட்ட செயலாளர் பொ.இராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் எஸ்.கே.எம்.பாலகிருஷ்ணன், ஈரோடு மாநகர பொருளாளர் ஏ.ஆர்.சாதிக் பாஷா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி பழ துண்டுகளை வழங்கினர்.


மேலும், இந்த நீர்மோர் பந்தலில் ஒரு மாத காலத்துக்கு தினமும் 200 பேருக்கு நீர்மோர் வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News