ஈரோடு கோட்டை பெரிய பாவடி ஓங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
Erode news- ஈரோடு கோட்டை பெரிய பாவடி ஓங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்தனர்.;
Erode news- பெரிய பாவடி ஓங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உள்படம்:- சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் ஓங்காளியம்மன்.
Erode news, Erode news today- ஈரோடு கோட்டை பெரிய பாவடி ஓங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்தனர்.
ஈரோடு கோட்டை பெரிய பாவடியில் உள்ள ஓங்காளியம்மன் கோவிலில் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா கடந்த 25ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 26ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், 27ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 28ம் தேதி அக்னி கபாலம் நிகழ்ச்சியும், 29ம் தேதி விளக்கு பூஜையும் நடந்தது.
இதன் பிறகு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி 1ம் தேதி நேற்று காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி தீ மிதித்தனர். இதையடுத்து பொங்கல் மற்றும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.
பெரிய பாவடியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காலையில் இருந்து மாலை வரை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் சாப்பிட்டனர். இன்று இரவு அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை ஞாயிறு காலை மறு அபிஷேகத்துடன் விழா முடிகிறது .
விழாவுக்கான ஏற்பாடுகளை ஓங்காளியம்மன் அருட்பணி மன்றம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.