ஈரோடு நஞ்சனாபுரத்தில் கிராமப்புற நல மேம்பாட்டு முகாம் நிறைவு

ஈரோடு நஞ்சனாபுரத்தில் கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் கிராமப்புற நல மேம்பாட்டு முகாம் நிறைவு விழா நேற்று (21ம் தேதி) நடைபெற்றது.

Update: 2024-10-22 11:45 GMT
கிராமப்புற நல மேம்பாட்டு முகாம் நிறைவு விழாவில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு நஞ்சனாபுரத்தில் கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் கிராமப்புற நல மேம்பாட்டு முகாம் நிறைவு விழா நேற்று (21ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி சமூகப் பணித் துறையின் சார்பில் வளர்ச்சி விழி என்னும் கிராமப்புற நல மேம்பாட்டு முகாம் ஈரோடு நஞ்சனாபுரத்தில் கடந்த 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற்றது. இதன் நிறைவு விழா நேற்று (21ம் தேதி) நஞ்சனாபுரத்தில் நடைபெற்றது.


இதில் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லோகநாதன் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக கதிரம்பட்டி ஊராட்சி தலைவர் விசாலாட்சி மகாலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்முகாமில் சமூகப் பணித் துறை மாணவ, மாணவிகள் கிராமப்புற மக்களின் நலன் மேம்பாட்டுக்காக பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகள், நாடகங்கள் மற்றும் மருத்துவ முகாம்களை நடத்தினர்.

அதில், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் கற்பிப்போம், பாலின சமத்துவம், சிறுதானியத்தின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்குகள், குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, போதைப் பொருள் ஒழிப்பு குறித்து வீதி நாடகம், கண் மற்றும் பொது மருத்துவ முகாம்கள், பள்ளி குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு செயல்பாடு, தூய்மை பணிகள் மற்றும் இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.


இந்த நிகழ்வுகளில் ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த ஏழு நாட்கள் கிராமப்புற நல மேம்பாட்டை சிறப்பாக நடத்தி முடித்த சமூகப் பணித்துறை தலைவர் பூந்தமிழன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளை பாராட்டி பாராட்டு சான்றிதளை கதிரம்பட்டியின் ஊராட்சி தலைவர் விசாலாட்சி மகாலிங்கம் வழங்கினார்.

மேலும், சமூகப் பணித்துறை மாணவ, மாணவிகளை கல்லூரியின் தாளாளர் தங்கவேல், கல்லூரியின் முனைவர் முதல்வர் வாசுதேவன், நஞ்சனாபுர கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் நஞ்சனாபுர ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஞானாம்பாள் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.

Tags:    

Similar News