கொரோனாவால் ரேஷன் கடை ஊழியர் பலி…
கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ரேஷன் கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ஆர்.சவுகத்தலி,49. இவர், சம்பத் நகரில் உள்ள ஸ்ரீநடேசர் கூட்டுறவு பண்டக சாலை ரேஷன் கடையில் எடையாளராக பணி செய்தார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். கொரோனா பரவல் நிலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி, கொரோனா நிவாரண நிதிக்காக வீடுவீடாக டோக்கன் வழங்கும் பணி, 2,000 ரூபாய் வினியோகிக்கும் பணிகளை நிறைவு கொரோனா நிவாரண நிதிக்காக என அனைத்தை வேலைகளையும் நிறைவு செய்தார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து தமிழக அரசு, அவரது குடும்பத்துக்கு முன்களப்பணியாளர்களுக்கு வழங்குவது போல கொரோனா நிவாரண நிதி மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு பணியும் வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.