ஈரோடு வந்த தமிழக முதல்வரை அமைச்சர்கள், கலெக்டர் வரவேற்பு..!
ஈரோடு வந்த தமிழக முதல்வரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் , முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் வரவேற்றனர்.;
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக இன்று இரவு ஈரோடு வந்த தமிழக முதல்வரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் , முத்துசாமி மற்றும் மாவட்ட கலெக்டர் கதிரவன் வரவேற்றனர்.பின்னர் விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்களப்பணியாளர்களாக பணிபுரிந்து வரும் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி , ஊராட்சி போன்ற பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 10,000 பேருக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.