ஊரடங்கு மீறல் : ஒரே நாளில் 1086 வழக்குகள் பதிவு.

ஊரடங்கை மீறி சுற்றியதாக ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் 1086 வழக்குகள் பதிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

Update: 2021-05-19 08:07 GMT

 கடந்த 10 - ந் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் மக்கள் தங்கள் இஷ்டம் போல் சுற்றி திரிந்து வருவதால், முழு ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டது. குறிப்பாக ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 9 டிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் 700- க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களும் பறிமுதல் செய்தனர்.

நேற்று ஒரு நாள் மட்டும் ஈரோடு மாநகர் பகுதியில் முழு ஊரடங்கின் போது தேவையில்லாமல் ஏராளமான இருசக்கர வாகனங்கள் கார்களில் சுற்றினர். டவுன் டிஎஸ்பி ராஜூ தலைமையில் மாநகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து சோதனையிட்டனர்.  வாகனங்களில் தேவையில்லாமல் வந்தது, முகக்கவசம் அணியாதது உட்பட  ஒரே நாளில் 1,086 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.மேலும் 152 இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் தொடர் அதிரடி நடவடிக்கையால் மக்கள் வெளியே சுற்றுவதை சற்று குறைத்துள்ளனர்.

Tags:    

Similar News