ஜவுளி சந்தைகள் மூடல் : கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்

கொரோனா புதிய கட்டுப்பாடுகளின்படி ஜவுளி சந்தைகள் அடைக்கப்பட்டதால் 50,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.;

Update: 2021-05-06 08:45 GMT

மூடப்பட்டிருக்கும் ஈரோடு ஜவுளி சந்தை

ஈரோடு மாநகர் பகுதியில் புகழ்பெற்ற கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில் தினசரி கடைகள் 254, வாரசந்தை கடைகள் 700 கடைகள் செயல்பட்டு வருகிறது. இதேபோல் சென்ட்ரல் மார்க்கெட், அசோகபுரம் மார்க்கெட், கருங்கல்பாளையம் ஆஞ்சநேயர் மார்க்கெட் என மாநகரில் மொத்தம் 3 ஆயிரம் கடைகள் உள்ளன.

தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகம் எடுக்கத் தொடங்கிய உடன், அனைத்து வாரச்சந்தை கடைகளும் அடைக்கப்பட்டன. தினசரி சந்தை மட்டும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடந்து வந்தது. இந்நிலையில் இன்று முதல் கொரானா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால் தினசரி சந்தைகள் அனைத்தும் வரும் 20ஆம் தேதி வரை அடைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் ஜவுளி சந்தை தொழிலை மட்டுமே நம்பியுள்ள சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

Tags:    

Similar News