ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 97.60 மி.மீ மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 97.60 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 97.60 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடிப்பதும், மாலை, இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. மேலும், ஒரு சில இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை (நேற்று) காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. மாலை சுமார் 5 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் பலத்த மழையாக கொட்டியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை (செப்.28) நேற்று காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை (செப்.29) இன்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
கோபி - 3.20 மி.மீ ,
பவானி - 1.20 மி.மீ ,
சத்தியமங்கலம் - 10.00 மி.மீ ,
எலந்தகுட்டைமேடு - 1.40 மி.மீ ,
அம்மாபேட்டை - 18.40 மி.மீ ,
பவானிசாகர் அணை - 14.00 மி.மீ ,
கொடிவேரி - 36.00 மி.மீ ,
குண்டேரிப்பள்ளம் - 9.80 மி.மீ ,
வரட்டுப்பள்ளம் - 3.60 மி.மீ
மாவட்டத்தில் மொத்தமாக 97.60 மி.மீ ஆகவும் , சராசரியாக 5.74 சதவீதமாகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.