ஈரோடு மாவட்டத்தில் 263.70 மி.மீ மழை பதிவு!

கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் 263.70 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 66.60 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Update: 2024-10-08 03:45 GMT

மழை (பைல் படம்).

கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் 263.70 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 66.60 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

தெற்கு ஆந்திரா- வடதமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு- தென்மேற்கு வங்க கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஈரோடு, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்றும் (அக்.7) திங்கட்கிழமை, இன்றும் (அக்.8) செவ்வாய்க்கிழமை கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மாநகரப் பகுதிகளில் பரவலாகவும், அதன்‌ சுற்றுவட்டார பகுதிகளிலும் அந்தியூர், பவானி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், நம்பியூர், அம்மாபேட்டை, டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் தோட்டங்களில் தண்ணீா் தேங்கியது. இந்த மழையால், மாவட்டம் முழுவதும் குளிா்ந்த காற்று வீசியது.

மாவட்டத்தில் நேற்று (அக்.7) திங்கட்கிழமை காலை 8 மணி முதல் இன்று (அக்.8) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:- 

ஈரோடு - 11 மி.மீ, மொடக்குறிச்சி - 2.20 மி.மீ, பெருந்துறை - 1 மி.மீ, சென்னிமலை - 2 மி.மீ, பவானி - 13 மி.மீ, கவுந்தப்பாடி - 2.20 மி.மீ, அம்மாபேட்டை - 14.20 மி.மீ, வரட்டுப்பள்ளம் அணை - 66.60 மி.மீ, கோபிசெட்டிபாளையம் - 15.20 மி.மீ, எலந்தகுட்டைமேடு - 28 மி.மீ,  கொடிவேரி அணை - 23.70 மி.மீ, குண்டேரிப்பள்ளம் அணை - 30.20 மி.மீ, நம்பியூர் - 6 மி.மீ, சத்தியமங்கலம் - 10 மி.மீ, பவானிசாகர் அணை - 10.20 மி.மீ, தாளவாடி - 28.50 மி.மீ மழை பதிவானது.

மேலும், மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 66.60 மி.மீ ஆகவும், சராசரியாக 15.51 மி.மீ ஆகவும், மொத்தமாக 263.70 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News