ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23.40 மி.மீ மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23.40 மி.மீ மழை பதிவான நிலையில், பவானியில் அதிகபட்சமாக 20.20 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23.40 மி.மீ மழை பதிவான நிலையில், பவானியில் அதிகபட்சமாக 20.20 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை இல்லாமல் வறண்ட வானிலை காணப்பட்டது. இதன் காரணமாக, 105 டிகிரி வரை வெயில் பதிவானது. இந்த வெயில் காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நேற்று முன்தினம் மாவட்டத்தில் 6.6 மி.மீ மழை பதிவான நிலையில், நேற்று மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக பவானி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 20.20 மி.மீ மழை பதிவானது. இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
மாவட்டத்தில் நேற்று (ஜூன்.1) சனிக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (ஜூன்.2) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
பவானி - 20.20 மி.மீ,
கொடுமுடி - 2.00 மி.மீ,
ஈரோடு - 1.20 மி.மீ,
மாவட்டத்தில் மொத்தமாக 23.40 மி.மீ ஆகவும், சராசரியாக 1.38 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.