ஈரோடு மாவட்டத்தில் தொடரும் மழை: 24 மணி நேரத்தில் 207.80 மி.மீ., பதிவு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 207.80 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணையில் 36.20 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

Update: 2024-10-14 03:45 GMT

தாளவாடி பகுதியில் நேற்று பெய்த மழையால் திகனாரையில் இருந்து தாளவாடி செல்லும் சாலையில் மல்குத்திபுரம் என்ற இடத்தில் இருக்கும் தரைப்பாலம் மூழ்கியதை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 207.80 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணையில் 36.20 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு சில தினங்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த அக்.7ம் தேதி சாரலுடன் பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து சீரான இடைவெளியில் அவ்வப்போது பெய்து கொண்டே இருந்தது. காலையில் வெயில் அடித்தாலும் மதியம் 1 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கி விடுகிறது.மாலை 4 மணி முதல் இரவு வரை இடைவிடாது மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால், அணைகள், ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகிறது.

இதைத்தொடர்ந்து 7வது நாளாக நேற்று (13ம் தேதி) காலை முதலே வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து, மதியம் 1 மணிக்கு மழை பெய்ய தொடங்கிய மழை விட்டு விட்டு இரவு வரை பெய்து கொண்டே இருந்தது. இதில், அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணையில் 36.20 மி.மீ மழை பெய்தது. இதேபோல், மாவட்டத்தில் சராசரியாக 12.22 மி.மீ மழையும், மொத்தமாக 207.80 மி.மீ மழையும் பதிவானது.

மாவட்டத்தில் நேற்று (13ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (14ம் தேதி) திங்கட்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு விவரம்:- 

ஈரோடு - 0.30 மி.மீ., 

மொடக்குறிச்சி - 27.20 மி.மீ.,

கொடுமுடி - 4 மி.மீ.,

பெருந்துறை - 13 மி.மீ.,

சென்னிமலை - 12 மி.மீ.,

கவுந்தப்பாடி - 13.40 மி.மீ., 

அம்மாபேட்டை - 14 மி.மீ.,

வரட்டுப்பள்ளம் அணை - 36.20 மி.மீ.,

கோபிசெட்டிபாளையம் - 3.20 மி.மீ.,

எலந்தகுட்டைமேடு - 4.20 மி.மீ.,

கொடிவேரி அணை - 7 மி.மீ.,

குண்டேரிப்பள்ளம் அணை - 2.70 மி.மீ.,

நம்பியூர் - நம்பியூர் - 8 மி.மீ.,

சத்தியமங்கலம் - 32 மி.மீ.,

பவானிசாகர் அணை - 6.60 மி.மீ.,

தாளவாடி - 24 மி.மீ., மழை பெய்தது.

Tags:    

Similar News