ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 194 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 194 மி.மீ மழை பதிவான நிலையில், அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் 91.20 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-29 03:15 GMT

மழை (மாதிரிப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 194 மி.மீ மழை பதிவான நிலையில், அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் 91.20 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று (28ம் தேதி) மழை பெய்தது. குறிப்பாக, கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் இரவில் கனமழை பெய்தது. இரவு நேரத்தில் பெய்த இந்த மழையால், மாவட்டத்தில் பல்வேறு பகுதி முழுக்க குளிர்ச்சியான சூழல் நிலவியது.

மாவட்டத்தில் நேற்று (28ம் தேதி) சனிக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (29ம் தேதி) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:- 

அம்மாபேட்டை - 1.20 மி.மீ,

வரட்டுப்பள்ளம் அணை - 63.00 மி.மீ,

எலந்தகுட்டைமேடு - 2.20 மி.மீ,

கொடிவேரி அணை - 6.00 மி.மீ,

குண்டேரிப்பள்ளம் அணை - 91.20 மி.மீ,

சத்தியமங்கலம் - 11.00 மி.மீ,

பவானிசாகர் அணை - 19.40 மி.மீ,

மாவட்டத்தில் மொத்தமாக 194.0 மி.மீ ஆகவும், சராசரியாக 11.41 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News