ஈரோடு மாவட்டத்தில் 191.80 மில்லி மீட்டர் மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை (நேற்று) சூறைக்காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது.

Update: 2023-08-31 02:00 GMT

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று மாலை மழை பெய்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை (நேற்று) சூறைக்காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது.

கோடை முடிவடைந்து, தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிய பின்னரும், ஈரோடு மாவட்டத்தில் போதிய மழையின்றி வறண்ட வானிலையே நிலவி வந்தது. இதனால், கோடை காலத்தை போலவே 100 டிகிரிக்கு மேலாக வெயில் வாட்டி வந்தது. 

இந்த நிலையில், தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.  அதன்படி, கடந்த 2 தினங்களாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. 


ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை (நேற்று) காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் காணப்பட்டது. இந்நிலையில், மாலை முதல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் பரவலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது.

மாவட்டத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நேற்று காலை 6 மணி முதல் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) இன்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம்:-

ஈரோடு - 20.00 மி.மீ ,

பவானி - 6.40 மி.மீ ,

தாளவாடி - 8.00 மி.மீ ,

கொடுமுடி - 14.20 மி.மீ ,

மொடக்குறிச்சி - 46.00 மி.மீ ,

கவுந்தப்பாடி - 41.20 மி.மீ ,

சென்னிமலை - 2.00 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 44.00 மி.மீ 

குண்டேரிப்பள்ளம் - 10.00 மி.மீ என மாவட்டத்தில் மொத்தமாக 191.80 மி.மீ. மழையும், சராசரியாக 11.20 மி.மீ. மழையும் பதிவானது.

Tags:    

Similar News