ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 152.20 மி.மீ மழை பதிவு

Erode news- ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 152.20 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.

Update: 2023-11-26 06:30 GMT

Erode news- ஈரோட்டில் மழை (கோப்புப் படம்).

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 152.20 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.  இதனிடையே மாவட்டத்தில் நேற்றும் (சனிக்கிழமை) பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பவானியில் 52.40 மீ.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது. 

மாவட்டத்தில் நேற்று (நவ.25) சனிக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (நவ.26) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

ஈரோடு - 26.00 மி.மீ ,

சென்னிமலை - 9.00 மி.மீ ,

பவானி - 52.40 மி.மீ ,

கவுந்தப்பாடி - 11.40 மி.மீ ,

கோபி - 4.20 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு- 23.00 மி.மீ ,

கொடிவேரி - 4.00 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 18.70 மி.மீ ,

சத்தி - 2.00 மி.மீ ,

பவானிசாகர் - 1.00 மி.மீ ,

தாளவாடி - 0.50 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு 152.20 மி.மீ ஆகவும் சராசரியாக 8.95 மி.மீ ஆகவும் மழையளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News