ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 111.80 மி.மீ மழை பதிவு
Erode News- ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 111.80 மி.மீ மழை பதிவான நிலையில், அதிகபட்சமாக ஈரோட்டில் 28.00 மி.மீ மழை பதிவாகி உள்ளது .
Erode Today News, Erode News - ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 111.80 மி.மீ மழை பதிவான நிலையில், அதிகபட்சமாக ஈரோட்டில் 28.00 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று (6ம் தேதி) பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் நேற்று மாலை 5 மணி அளவில் மழை பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒன்றரை மணி நேரம் பலத்த மழையாக கொட்டித் தீர்த்தது. அதன்பிறகும், மழை தூறிக்கொண்டே இருந்தது. பலத்த மழை காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நாச்சியப்பா வீதி, தில்லை நகர், மீனாட்சி சுந்தரனார் வீதி, வாசுகி வீதி, ஆர்.கே.வி. சாலை, மணிக்கூண்டு, காளை மாட்டு சிலை, சென்னிமலை சாலை, சத்தி சாலை, பெருந்துறை சாலை, மோசிக்கீரனார் வீதி, வளையக்கார வீதி, காவிரி சாலை என ஈரோடு மாநகர் முழுவதும் சாலைகள் திடீர் வெள்ளக்காடாக மாறியது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள் முடிந்து வீடு திரும்பிய மாணவ- மாணவிகளும், வேலை முடிந்த பிறகு சென்றவர்களும் மழையில் நனைந்தபடி சென்றனர்.
நேற்று (6ம் தேதி) காலை 8 மணி முதல் இன்று (7ம் தேதி) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேர நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவின் விவரங்கள் மில்லி மீட்டரில் வருமாறு:- ஈரோடு - 28, மொடக்குறிச்சி - 14.20, கொடுமுடி - 8.60, பெருந்துறை -2, பவானி -7.60, கவுந்தப்பாடி -2.20, அம்மாபேட்டை - 16, வரட்டுப்பள்ளம் அணை -21, குண்டேரிப்பள்ளம் அணை - 1.20, சத்தியமங்கலம் -11 என பரவலாக மழை பெய்தது.
மேலும், மாவட்டத்தில் மொத்தமாக 111.80 மி.மீ ஆகவும், சராசரியாக 6.58 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.