ஈரோடு மாவட்டத்தில் 2வது நாளாக பரவலாக மழை; 94.40 மி.மீ பதிவு
ஈரோடு மாவட்டத்தில் திங்கட்கிழமை (நேற்று) இரண்டாவது நாளாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 25.40 மி.மீ மழையளவு பதிவானது.;
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மதியம் பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) காலை ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
மதியத்திற்கு மேல் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த சூழல் நிலவியது. தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அந்தியூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், குருவரெட்டியூர் பகுதியில் வாழை மரங்கள் சாய்ந்து சேதமானது.
மாவட்டத்தில் நேற்று (அக்.30) திங்கட்கிழமை காலை 6 மணி முதல் இன்று (அக்.31) செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
ஈரோடு - 5.00 மி.மீ ,
கோபி - 4.20 மி.மீ ,
பவானி - 1.20 மி.மீ ,
பெருந்துறை - 13.00 மி.மீ ,
சத்தியமங்கலம் - 17.00 மி.மீ ,
தாளவாடி - 4.00 மி.மீ ,
கவுந்தப்பாடி - 8.40 மி.மீ ,
அம்மாபேட்டை - 8.00 மி.மீ ,
பவானிசாகர் அணை - 2.60 மி.மீ ,
குண்டேரிப்பள்ளம் அணை - 5.60 மி.மீ ,
வரட்டுப்பள்ளம் அணை - 25.40 மி.மீ ,
மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 94.40 மி.மீ ஆகவும், சராசரியாக 5.55 சதவீதமாகவும் பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.