ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம்: 220 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஈரோட்டில் இன்று (5ம் தேதி) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 220 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

Update: 2024-08-05 10:30 GMT

ஈரோட்டில் இன்று (5ம் தேதி) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 220 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (5ம் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டமானது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, சக்கர நாற்காலி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 220 மனுக்கள் பெறப்பட்டன.


பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News