ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில், ரேஷன் அரிசி கடத்தியதாக 194 வழக்குகள் பதிவு

கடந்த ஆண்டில், ரேஷன் அரிசி கடத்திய 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் புலனாய்வு துறை போலீசார் தகவல்.

Update: 2022-01-01 10:15 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்பாக, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதனை தடுக்கும் வகையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இவ்வாறாக, கடந்த 2021 வருடம் முழுவதும் ஈரோடு மாவட்டம் முழுவதும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ரேஷன் அரிசி கடத்தியதாக 194 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 230 பேர் கைது செய்யப்பட்டனர். 54 இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. கலப்பட டீசல் விற்றதாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 3,200 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News