ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில் 7வது இடம்

ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 95.08 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-05-10 10:15 GMT

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பார்த்த மாணவிகளை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 95.08 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ம் தேதி துவங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 12 ஆயிரத்து 404 மாணவர்களும், 12 ஆயிரத்து 422 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 826 பேர் எழுதினர்.

இவர்களில் 11 ஆயிரத்து 548 மாணவர்களும், 12 ஆயிரத்து 057 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 605 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.08 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 0.55 சதவீதம் அதிகம். மாநில அளவில் கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் 7வது இடம் பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டும் அதே 7வது இடத்தைப் பிடித்துள்ளது.

அரசு பள்ளிகளை பொருத்தவரை ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 189 அரசு பள்ளிகளில் 6 ஆயிரத்து 267 மாணவர்களும், 6 ஆயிரத்து 857 மாணவிகளும் என மொத்தம் 13 ஆயிரத்து 124 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 5 ஆயிரத்து 993 மாணவர்களும், 6 ஆயிரத்து 530 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 123 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 92.37 ஆகும். 

Tags:    

Similar News