மது விற்ற 9 பேர் கைது உள்ளிட்ட ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்...

ஈரோடு மாவட்டத்தில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்களின் தொகுப்பை இங்கு காண்போம்.;

Update: 2023-03-30 14:15 GMT

பைல் படம்.

மது விற்ற 9 கைது :- 

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சத்தியமங்கலம், பங்களாப்புதூர், கடம்பூர், சென்னிமலை போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று தீவிர கண்காணிப்பில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது, அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 9 பேரை பிடித்தனர். இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 144 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

கள் விற்றவர் கைது :- 

ஈரோடு, வெள்ளித்திருப்பூர் போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள குன்னிமரத்துதோட்டம் பகுதியில் ஒருவர் கள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர், வெள்ளித்திருப்பூர், வாழை குட்டை தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீ சார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 3 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி:- 

ஈரோடு அடுத்த மாவேலிபாளையம் ரயில் நிலையத்துக்கும்-சங்ககிரி ரயில் நிலையத்துக்கும் இடையே தண்டவாளத்தில் சம்பவத்தன்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஈரோடு ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News