கஞ்சா விற்ற 3 பேர் கைது உள்ளிட்ட ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்...

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 400 கிராம் அளவுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-05-03 10:45 GMT

ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள் (பைல் படம்).

கஞ்சா விற்ற 3 பேர் கைது:

ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் அதே பகுதியை சேர்ந்த முஸ்தபா மகன் பாசில் (வயது 26) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

இதேபோல்,  பவானி புதிய பேருந்து நிலைய பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், தேவூர், புள்ளாக்கவுண்டன்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் மகன் விஜயன் என்கிற விஜயகுமார் (26), தூத்துக்குடி மாவட்டம், வாத்து தெருவை சேர்ந்த ஜவகர் மகன் சபீர்முகமது (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புரோகிதர் தீக்குளித்து தற்கொலை:

பவானி, காலிங்கராயன்பாளையம், கிழக்கு முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். மணிகண்டன் பவானி கூடுதுறையில் பரிகார புரோகிதராக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக போதிய வருமானம் கிடைக்காததால், பல்வேறு இடங்களில் மணிகண்டன் கடன் வாங்கி உள்ளார். இதனால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில், கடந்த 28ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதால் வாழ்க்கையில் வேதனை அடைந்த மணிகண்டன் திடீரென பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதில், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி மாயம்; கணவர் புகார்:

நசியனூர், வேட்டுவபாளையத்தை சேர்ந்தவர் உத்தமராஜ். இவரது மனைவி தாமரைச்செல்வி (39). இவர், கடந்த 27ம் தேதி நசியனூரில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுத்து வருவதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் தாமரைச்செல்வி குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கணவர் உத்தமராஜ் நசியனூர் போலீசில் நேற்று புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News