சிறுமியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது: ஈரோடு மாவட்ட கிரைம்..
பெருந்துறையில் சிறுமியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
தொழிலாளி போக்சோவில் கைது:- ஈரோடு பெருந்துறை சாலை வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த சின்னச்சாமி மகன் தினேஷ்குமார் (26), கட்டிட தொழிலாளி. இவரும் ஈரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2ம் தேதி சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் பெருந்துறை போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில்,போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுமி. தினேஷ்குமாருடன் ஈரோட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் மீட்டு பெருந்துறை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று நேற்று விசாரித்தனர். இதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும், தற்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெருந்துறை போலீசார் தினேஷ்குமார் மீது போக்சோ வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி கோபி சிறையில் அடைத்தனர்.
மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை:- பவானி தாலுகா அய்யம்பாளையம்புதூரை சேர்ந்த பழனிசாமி மனைவி சரஸ்வதி (67). காய்கறி வியாபாரி. சரஸ்வதிக்கு கடந்த 3 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த 5ம் தேதி இரவு சரஸ்வதி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சரஸ்வதியை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சரஸ்வதி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரஸ்வதியின் மகன் கார்த்தி நேற்று கவுந்தப்பாடி போலீசில் புகார்.அளித்தார்.இதன் பேரில்,போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாராயம் காய்ச்சியவர் கைது:- ஈரோடு ராயர்பாளையம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சோளகாடு பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று சாராயம் காய்ச்சிய அதேபகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் விஜி (39) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராய ஊரலினை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
மது விற்ற 3 பேர் கைது:- ஈரோடு பங்களாபுதூர் கொங்கர்பாளையம் பழையூர் பகுதியில் நேற்று சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த செல்வன் மனைவி பவுதாள் (51) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், பவானிசாகர் பங்களாமேடு பகுதியில் முருகேசன் (53), கடத்தூர் குள்ளம்பாளையம் பகுதியில் மது விற்றதாக இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கந்தசாமி (68) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, 26 மதுபாட்டில்களை பறி முதல் செய்தனர்.