அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடித்தேர்த்திருவிழா: ஜூலை 17ல் பூச்சாட்டு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடித் தேர்த்திருவிழாவில் பூச்சாட்டுதல் வரும் ஜூலை 17ம் தேதி நடக்கிறது.

Update: 2024-06-26 13:35 GMT

குருநாதசுவாமி கோயில் தேர்த்திருவிழா (கோப்புப் படம்).

அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடித் தேர்த்திருவிழா பூச்சாட்டுதல் வரும் ஜூலை 17ம் தேதி நடக்கிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோயில் தமிழகத்தில் புகழ் பெற்ற கோயிலாகும். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர்திருவிழாவுடன் மாடு மற்றும் குதிரைச்சந்தையும் நடக்கும்.

அதன்படி, இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா வரும் ஜூலை 17ம் தேதி (புதன்கிழமை) பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து, ஜூலை 27ம் தேதி (புதன்கிழமை) கொடியேற்றம் நடக்கிறது.

இதை தொடர்ந்து, ஜூலை 31ம் தேதி (புதன்கிழமை) முதல் வன பூஜை நடக்கிறது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 7ம் தேதி (புதன்கிழமை) முதல் 10ம் தேதி (சனிக்கிழமை) வரை பண்டிகையின் முக்கிய நிகழ்வான தேர்திருவிழா மற்றும் மாடு, குதிரை சந்தை நடக்கிறது. ஆகஸட் 14ம் தேதி (புதன்கிழமை) பால் பூஜையுடன் விழா முடிகிறது.

இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் சாந்தப்பன், குருராஜேஷ், கோவில் செயல் அலுவலர் மோகனப்பிரியா ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News