ஈரோடு மாநகராட்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதார மேளாளர், புள்ளியியல் உதவியாளர், நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.;

Update: 2024-06-21 19:30 GMT

ஈரோடு மாநகராட்சி அலுவலகம்.

ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதார மேலாளர், புள்ளியியல் உதவியாளர், நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதார மேலாளர், புள்ளியியல் உதவியாளர், நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள பொது சுகாதார மேலாளர் மற்றும் புள்ளியியல் உதவியாளர் பணியிடம் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

பொது சுகாதார மேலாளர் பணியிடங்களுக்கு இளங்கலை பட்டம் (விலங்கியல் அல்லது பூச்சியியல்) ஒரு பாடமாக உள்ள பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். புள்ளியியல் உதவியாளர் பணியிடத்திற்கு இளநிலை புள்ளியியல் அல்லது கணினியியல் பட்டம் அல்லது பட்டம் பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நகர்புற சுகாதார செவிலியர் பணியிடமும், தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். நகர்புற சுகாதார செவிலியர் பணியிடத்திற்கு ஏஎன்எம் படித்தவர்கள் மற்றும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலிங்கில் பதிவேற்றம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மருத்துவமனை பணியாளர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரத்து 500ம் சம்பளம் வழங்கப்படும்.

இந்த பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பணியிடங்களும் முற்றிலும் தற்காலிகமானது. ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். எக்காரணம் கொண்டும் பணி வரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

கல்வி சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை வருகின்ற 05 ஜூலை 2024ம் தேதிக்குள் ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்புமாறு மாநகர நல அலுவலர் மருத்துவர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News